செங்கல்பட்டு மாவட்டம் சிங்க பெருமாள் கோவில் அருகே ரியல் எஸ்டேட் அதிபரை விரட்டி சென்று கொலை மிரட்டல் விடுத்த இடைதரகர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கூவத்தூர் பகுதியில் பத்திரப் பதிவை முடித்துக் கொண்டு சிங்க பெருமாள் கோவிலை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான துரை சண்முகம் மணி என்பவர் தனது மனைவி மற்றும் சகோதரருடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். முன் விரோதம் காரணமாக காரில் பின் தொடர்ந்து வந்த இடைதரகர் ராஜா என்பவர் தொலைபேசியில் கொலை மிரட்டல் கொடுத்ததாகவும்,
காரை மடக்கி மிரட்டியதாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த துரை சண்முகம் மணி புகார் அளித்துள்ளார். தமக்கும், குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று புகாரில் அவர் வலியுறுத்தியுள்ளார். புகாரின் பேரில் இடைதரகர் ராஜா உட்பட மூன்று பேரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய கூலிப்படையை சேர்ந்த 17 பேரை தேடிவருகின்றனர் .