சீரியல் ஜோடி சித்து, ஸ்ரேயாவுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த சேனலின் டி.ஆர்.பி ரேட்டிங் ஏறுவதற்கு இந்த சீரியல் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. திருமணம் சீரியலில் சித்தார்த், ஸ்ரேயா இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியல் மூலம் சித்து, ஸ்ரேயா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி-2 சீரியலில் சித்து கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் நீண்ட நாட்களாக காதலர்களாக இருந்து வந்த சித்து, ஸ்ரேயா இருவருக்கும் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதையடுத்து இந்த ஜோடிக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .