Categories
சினிமா தமிழ் சினிமா

ரியல் வின்னர் ரம்யா தான்… டாஸ்கில் செய்த தவறை ஒத்துக்கொண்ட பாலா… வெளியான மூன்றாம் புரோமோ…!!

பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 2 புரோமோக்கள் வெளியான நிலையில் தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் அடுத்த வார தலைவர் பதவிக்கான டாஸ்க்கில் பாலாஜி, ரம்யா, நிஷா ஆகிய மூவரும் போட்டியிடுகின்றனர். இதில் கொடுக்கப்பட்ட பிளாக்குகளை வைத்து தங்களது உருவத்தை வரவேற்க வேண்டும் . இந்த போட்டியில் பாலா வெற்றி பெற்றதாக தெரிகிறது.

ஆனால் இதையடுத்து பாலா ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் தன்னுடைய பிளாக்குகளில் தவறு இருப்பதாகவும் அதனால் ரியல் வின்னர் ரம்யா தான் என அறிவிக்கிறார். ஏற்கனவே நடைபெற்ற தலைவர் போட்டியில் பாலாவின் தவறை கமல் குறும்படம் போட்டுக் காட்டி புரிய வைத்தார். அதனால் இந்த முறை பாலா தானே தவறை உணர்ந்து அனைவரின் முன்னிலையில் ஒத்துக்கொண்டார். இதையடுத்து அடுத்த வார தலைவர் பதவியில் இருக்கப்போவது பாலாவா? அல்லது ரம்யாவா? என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.

Categories

Tech |