Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

‘ரியல் ஹீரோ’…. சுஷில் ஜி…. பண்டைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநரை பாராட்டிய விவிஎஸ் லக்ஷ்மன்…. செம வைரல்..!!

கார் விபத்திற்குப் பிறகு ரிஷப் பண்டைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநரை ‘ரியல் ஹீரோ’ என்று விவிஎஸ் லக்ஷ்மன் பாராட்டிய நிலையில், அந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் வெள்ளிக்கிழமை (நேற்று) காலை தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் டெல்லியில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்த போது பயங்கர விபத்தில் சிக்கினார். அவரது கார் டிவைடரில் மோதி தீப்பிடித்தது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்து, நெற்றிக்கு மேல் வெட்டுக் காயம் ஏற்பட்டாலும், சரியான நேரத்தில் காரை விட்டு வெளியே வந்ததால் பந்த் அதிர்ஷ்டசாலி. இதையடுத்து முதலில் சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் பண்ட் சிகிச்சை பெற்று வருகிறார். ரிஷப்பின் நெற்றியில் 2 வெட்டுக்கள், வலது முழங்காலில் ஒரு தசைநார் கிழிந்துள்ளது மற்றும் அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால்விரல் ஆகியவற்றிலும் காயம் மற்றும் முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன. ரிஷப்பின் நிலை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் எஸ்யூவி விபத்துக்குப் பிறகு கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தை வெளியே அழைத்துச் சென்றவர்களில் சுஷில் மான் என்ற ஹரியானா ரோட்வேஸ் பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர் ஆவர். காயமடைந்த நபர் யார் என்று தனக்குத் தெரியாது என்றும், அவசரமாக ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்ததாகவும் மான் கூறினார்.

ஹரியானா ரோட்வேஸ் பின்னர் சுஷிலை கௌரவித்ததாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. “அவர்கள் பானிபட் திரும்பியதும் எங்கள் அலுவலகத்தில் அவர்களுக்கு ஒரு பாராட்டு கடிதம் மற்றும் கேடயம் கொடுத்தோம்” என்று ஹரியானா ரோட்வேஸ் பானிபட் டிப்போ பொது மேலாளர் குல்தீப் ஜங்ரா PTI இடம் கூறினார்.

இந்நிலையில் முன்னாள் இந்திய பேட்டரும் தற்போதைய NCA தலைவருமான VVS லக்ஷ்மன், சுஷிலைப் பாராட்டினார். “ரிஷப்பந்தை எரியும் காரில் இருந்து அழைத்துச் சென்று, பெட்ஷீட் போர்த்தி, ஆம்புலன்சை அழைத்த ஹரியானா ரோட்வேஸ் டிரைவர் #சுஷில்குமாருக்கு நன்றி. சுஷில் ஜி #ரியல்ஹீரோ, உங்களின் தன்னலமற்ற சேவைக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்” என்று ட்விட் செய்துள்ளார்.

“ரிஷப்பிற்கு உதவிய டிரைவர் சுஷீலுடன் உதவிய பஸ் கண்டக்டர் பரம்ஜித் அவர்களுக்கும் சிறப்புக் குறிப்பு. மன உறுதியும் பெரிய மனமும் கொண்ட இந்த தன்னலமற்ற தோழர்களுக்கு மிகவும் நன்றி. அவர்களுக்கும் உதவிய அனைவருக்கும் நன்றி” என்று அவர் மற்றொரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். இவரது ட்விட் வைரலாகி வருகிறது.

பஸ் டிரைவர் சுஷில் மான் கூறியதாவது, எஸ்யூவி கார் எதிர் திசையில் இருந்து அதிவேகமாக வந்ததாகவும், அது டிவைடரில் மோதியதாகவும் கூறினார்.”நான் எனது பேருந்தை ஓரத்தில் வைத்துவிட்டு, விரைவாக டிவைடரை நோக்கி நானும், நடத்துனரும்ஓடினோம் ,” என்று மான் கூறினார். மேலும் ஓட்டுனர் (திரு பந்த்) பாதி கார் ஜன்னலுக்கு வெளியே இருந்தார். அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்று என்னிடம் கூறினார். கிரிக்கெட் வீரர் தனது தாயை அழைக்குமாறு கூறினார், இருப்பினும் அவரது தொலைபேசி அணைக்கப்பட்டது.”நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை, இது ரிஷப் பந்த் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என் பேருந்தில் இருந்த மற்றவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். ரிஷப்பை மீட்ட பிறகு, வேறு யாராவது இருக்கிறார்களா என்று காரில் விரைவாகத் தேடினேன். நான் அவனுடைய நீலப் பையையும், காரில் இருந்த 7,000-ரூ. 8,000 ரூபாயையும் எடுத்து ஆம்புலன்ஸில் கொடுத்தேன்,” என்று அவர் கூறினார். டிரைவர் சுஷில் குமாருக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Categories

Tech |