Categories
அரசியல்

ரியல் ஹீரோ பிரதமர் மோடி…. முதல்வர் ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார்….? எல். முருகன் கேள்வி…..!!!

பட்டியல் சமூகத்தினருக்கு எதற்காக முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை என எல். முருகன் தி.மு.க அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க அரசின் 8 ஆண்டுகள் சாதனை விளக்கக் கூட்டம் மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற நாளில் இருந்து இதுவரை இந்தியா முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது என்றார். அதன்பிறகு நாட்டின் வளர்ச்சிக்காக நூற்றுக்கணக்கான நல்லதொரு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தியுள்ளார். இதற்கு முன்பாக ஆட்சி செய்த காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி ஊழல் நிறைந்த ஆட்சியாகவே இருந்தது. இவர்கள் ஆட்சியில் விவசாயிகள் மரணம் என்பது பத்திரிகையில் தினம் ஒரு செய்தியாக இருந்தது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்ற பிறகு விவசாயிகள் பாதுகாப்பாக இருக்கின்றனர். ஏனெனில் விவசாயிகளுக்காக ஏராளமான நல்ல திட்டங்களை நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார். அதன்பிறகு பிரதமர் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வருடத்திற்கு ரூபாய் 6,000 பணம் செலுத்துவதால், சுமார் 46 லட்சம் விவசாயிகள் பயனடைகின்றனர். இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி ஏழை மக்களுக்காக இலவச வீடு, கழிவறை, குடிநீர், எரிவாயு இணைப்பு போன்ற ஏராளமான திட்டங்களை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து பேசிய எல். முருகன் தி.மு.க அரசுக்கு சமூக நீதியைப் பற்றி பேசுவதற்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது என்றார். ஏனெனில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே மக்களிடம் கூறியுள்ளது.

இவர்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் ரூபாய் 1,000 வழங்கப்படும் என கூறினார்கள். ஆனால் இதுவரை ரூபாய் 1,000 குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படாததால் மக்கள் அனைவரும் தி.மு.க அரசின் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். அதன்பிறகு தி.மு.கவினர் திராவிட மாடல் என்று கூறுகின்றனர். இந்த திராவிட மாடல் என்ன என்பது யாருக்குமே புரியவில்லை. அதன்பிறகு முதல்வர் ஸ்டாலினுக்கு சமூக நீதி பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது. இவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய இலாகாக்கள் எதையும் ஒதுக்கவில்லை. இதுதான் சமூக நீதியா என கேள்வி எழுப்பினார் எல். முருகன். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் அனைவருக்கும் சமமான இடத்தை வழங்கி ரியல் ஹீரோவாக இருக்கிறார் என்றார்.

Categories

Tech |