Categories
சினிமா தமிழ் சினிமா

ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’… படத்தின் பாடலை பிக்பாஸ் வீட்டில் ரிலீஸ் செய்ய பிளான்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ரியோ நடிப்பில் தயாராகியுள்ள ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் பாடல் இன்று வெளியாகவுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ரியோ ராஜ் . இவர் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் ‌. இதையடுத்து இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

மேலும் இந்த படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யூடியூபில் வெளியாக உள்ள இந்தப் பாடலை பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரியோவுக்கு மட்டுமல்லாமல் போட்டியாளர்களுக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அருண் காமராஜ் பாடல் வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த பாடலை கேட்க ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

Categories

Tech |