பிக்பாஸ் பிரபலம் ரியோ நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரியோ . இதை தொடர்ந்து இவர் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் இவர் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது நடிகர் ரியோ ‘பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பத்ரி வெங்கடேசன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார் .
This time all of us are planning well for our safety so enga plan miss agathu. #planpannipannanum in theatres from Sep 24th. Come and laugh out loud. @rio_raj @nambessan_ramya @thisisysr @positiveprint_ @SonyMusicSouth @vijaytelevision @karnamurthyAC @krishnamaaya @DoneChannel1 pic.twitter.com/eVwH4UrANJ
— Badri Venkatesh (@dirbadri) September 3, 2021
மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது.