சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணியின் தலைவருமான வானதி சீனிவாசன் வலிமை படத்தினை பார்க்க ஆர்வம் காட்டுவதாக கூறியுள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகிறது. முன்னதாக வானதி சீனிவாசனிடம் ரசிகர்கள் வலிமை அப்டேட் குறித்து கேட்டது வைரலானது.
இந்நிலையில் அவரிடம் வலிமை திரைப்படத்தை பார்ப்பீர்களா? எனக் கேள்விக்கு பதிலளித்த அவர், “நிச்சயமாக வலிமை படம் வெளியானதும் பார்க்கப் போவேன். எனக்கு நேரம் கிடைத்தால் நல்ல படங்களை பார்ப்பது என் வழக்கம். விமான பயணங்களில் கிடைக்கும் நேரத்தில் தான் படம் பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.