காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். மேலும் அதிலிருந்து இந்த படத்தில் நடிகர் பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.