தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது மலையாளம், தெலுங்கு, படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மோகன்லாலுடன், இணைந்து மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்கிற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.
சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்தப் படம் 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கிறது. இந்தநிலையில் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தை OTT- யில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.