Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…அனுசரித்து செல்லுங்கள்.. பணம் சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் உருவாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று அசையும், அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் இருக்கும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. உத்தியோகத்தில் ஓரளவே உங்களுக்கு உயர்வினை இன்று எதிர்பார்க்கமுடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் பணியை திருப்திகரமாக சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கும். இன்று முக்கிய நபர்களின் அறிமுகமும் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். இன்று பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.

அதனால் உங்களுடைய திறமையும் இன்று வெளிப்படும். உடல்நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சிறப்பாகவே நடந்து முடியும். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள், மிகவும் சிறப்பாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் மிகுந்து காணப்படும். இருந்தாலும் தேர்வு முடியும் வரை கொஞ்சம் கவனமாகவே பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை எப்பொழுதும் போலவே எழுதிப்பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான  திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் நீலம் நிறம்

Categories

Tech |