Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு..ஆலய வழிபாடு சிறப்பு..யோசித்து செய்லபடுங்கள்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாளாகவே  இருக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது, நண்பர்களால் இன்று ஏமாற்றம் கொஞ்சம் இருக்கும். பயணங்களின் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். இன்று பணவரவு ஓரளவு திருப்தியை கொடுக்கும். எதிர்பார்த்து செய்வதால் பணம் நல்லபடியாக வந்து சேரும், சிலர் மேலிடத்தில் நேரடி அங்கீகாரத்தை பிடிப்பார்கள்.

மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை  இரண்டு நிமிடம் தியானம் இருந்து பின்னர் பாடங்களைப் படியுங்கள், மனம் அமைதியாக இருந்தால் உங்களுடைய கல்வி சிறப்பாக இருக்கும். அதுமட்டுமில்லை இன்று லட்சுமி தேவி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் மிகவும் சிறப்பு கொடுப்பதாகவே இருக்கும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் கவனத்துடன் மேற்கொள்வது நல்லது விளையாட்டுகளில் விளையாடும்போது ரொம்ப கவனமாக விளையாடுங்கள்.

இன்று வெளியூர் பயணம் ஓரளவு சிறப்பாகவே இருக்கும் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |