ரிஷபம் ராசி அன்பர்களே...! இன்று சிறு செயல் கூட கடினமானதாக தோன்றம். இன்று பொது விவகாரத்தில் நிதானித்து பேசுவது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் உள்ள அணுகுலம் பாதுகாக்கவும். அளவான பணவரவு தான் இன்று கிடைக்கும். வாகனத்தில் மிதவேகத்தை தான் பின்பற்றிச் செல்ல வேண்டும். மேல் அதிகாரியிடம் சுமூகமான உறவை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலைகளை பிறரிடம் தயவுசெய்து ஒப்படைக்க வேண்டாம்.உங்களுடைய ரகசியங்களையும் தயவுசெய்து யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
இன்று மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தங்கள் பணிகளை சரியாகவும் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும் அதாவது மன குழப்பம் கொஞ்சம் ஏற்படும். தனவரவு கால தாமதமாக வந்தாலும் கவலை வேண்டாம் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் கொஞ்சம் சீராகவே இருக்கும். மருத்துவ செலவுகள் ஏதும் இல்லை. இருந்தாலும் சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்பது ரொம்ப நல்லது.
கணவர் மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அது போலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு திசை
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்