ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று ஆதரவின்றி தவிப்பவர்களுக்கு ஆதரவு கரம் ஆகவே இருப்பீர்கள். இன்று தடைபட்ட சுபகாரியங்கள் தடபுடலாக நடைபெற்று மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை கொடுக்கும். எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கப் பெறும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள், வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
பிள்ளைகளிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்வது வெற்றிக்கு உதவும். மாணவச் செல்வங்கள் கல்வியில் கொஞ்சம் திறம்படச் செய்வதற்கு கடுமையாகத்தான் உழைக்க வேண்டி இருக்கும். பாடங்களை தெளிவாக படியுங்கள் படித்ததை எழுதிப் பாருங்கள், அது மட்டுமில்லை தேர்வு முடியும் வரை உணவு விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருங்கள்பழவகைகளை எடுத்துக்கொள்ளுங்கள். இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பசும்பால் அருந்தி விட்டுச் செல்லுங்கள், படித்த பாடம் நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு எப்பொழுதுமே ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சாம்பல் நிறம்