ரிஷபம் ராசி அன்பர்களே..!இன்று எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாகவே இருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாக பணிபுரிவீர்கள். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்லக்கூடும். இன்று மாணவர்கள் கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உன் புத்தி சாதுரியத்தால் வெற்றி காரியங்களை செய்வீர்கள்.
எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தேர்வு முடியும் வரை மாணவர்கள் கொஞ்சம் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.கொஞ்சம் கடுமையாக உழைத்து படியுங்கள். உணவுக் கட்டுப்பாட்டிலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
வெள்ளை நிறம் உங்களுக்கு எப்பொழுதுமே அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்