Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு..கோபம் கொஞ்சம் தலைதூக்கும்..புதிய முயற்சிகள் முன்னேற்றம் கொடுக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்,  சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள், நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருள் வீட்டில் சேரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் மூலம் கோபம் கொஞ்சம் தலைதூக்கும். கணவன் மனைவிக்கு இடையே கோபத்தை விட்டு, விட்டு நிமித்தமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். பிள்ளைகளின் மூலம் பெருமை கிடைக்கும்.

எந்த ஒரு விஷயத்தையும் இன்று துணிச்சலாக எதிர்கொள்வீர்கள். உடலில் வசீகரத் தன்மை கூடும். காதல் வயப்படக்கூடிய சூழலும் இருக்கும். காதலர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றமான சூழலாக இருக்கும். மாணவர்களுக்கு நல்ல வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கான சூழல் இருக்கும். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் மனதை மட்டும் ஒருநிலைப்படுத்தி அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு நிமிட தியானம் மேற்கொண்டு பின்னர் பாடங்களைப் படியுங்கள், சிறப்பாக இருக்கும். தேர்வு முடியும் வரை காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பழங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்,

இரவில் தூங்க செல்வதற்கு முன் பால் அருந்திவிட்டு செல்லுங்கள், படித்த பாடம் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு எப்பொழுதுமே ஒரு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் எப்பொழுதுமே வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம் மஞ்சள் நிறம்

Categories

Tech |