ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும் நாளாகவே இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடர்வீர்கள். நண்பர்கள் நல்ல செய்திகளை கொண்டுவந்து சேர்க்கக் கூடும். அயல்நாட்டு அனுகூலம் ஏற்படும். வெளிநாட்டு செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய வேலைவாய்ப்புகள் தகுதிக்கு ஏற்றபடி அமையும். பெண்கள் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை கொஞ்சம் இருக்கும், கவலை வேண்டாம்.
இறைவழிபாட்டு உங்களுக்கு ரொம்ப சிறப்பை கொடுக்கும். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள், வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உடல்நிலையில் கொஞ்சம் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படக்கூடும், அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள், இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். தேர்வில் வெற்றி பெற கூடிய சூழலும் சிறப்பாக அமையும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் வேறு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்:-4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்