ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு தாராளமாக வந்து சேரும் நாளாகவே இருக்கும். தன்னம்பிக்கையோடு பணியாற்றி தடைகளை அகற்றுவார்கள். புதியவர்களின் நட்பு உங்களுக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் நாட்டம் செல்லும். விவாதப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு வீடு மனை வாங்கும் கனவுகள் நனவாகும்.
கடன்கள் அனைத்தும் இன்று குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய கடுமையாக பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடும். தேர்வு முடியும் வரை மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். தயவுசெய்து படித்த பாடத்தை எழுதி பாருங்கள்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை அன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்