ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று தன வரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். நினைத்த காரியம் நினைத்தது போல் நடக்கும். புத்திசாலித்தனத்தால் பொருளாதார நிலை மேம்படும், இன்று பணவரவு அதிகப்படும். அதேபோல செலவு கொஞ்சம் கூடும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். துணிச்சல் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது ரொம்ப நல்லது. இன்று எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். நிதானமாக காரியங்களை மேற்கொண்டு சிறப்பு அடைவீர்கள். இன்று மாணவ செல்வங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்காலம் பற்றி சிந்தனைகள் மேலோங்கும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்