Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு.. பேசும்பொழுது நிதானம் தேவை.. எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வெளிவட்டாரத் தொடர்பு கொஞ்சம் உங்களுக்கு பிரச்சினை கொடுப்பதாகவே அமையும். அதாவது புதிய நபரிடம் பேசும் பொழுது கொஞ்சம் கவனமாக பேச வேண்டும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து செல்லும். இன்று பழைய கடனை தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் கொஞ்சம் சிரமமான சூழ்நிலையை காணப்படும். எதிரிகளிடம் கொஞ்சம் நீங்கள் விலகி இருப்பது நல்லது.

உடல் ஆரோக்கியத்தை ரொம்ப கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். கொடுக்கல் வாங்கல்கள் இப்போதைக்கு ஏதும் வேண்டாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது ரொம்ப நல்லது. சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள். அதேபோல மனம் கொஞ்சம் அலைபாய கூடும். தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப நல்லது.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

Categories

Tech |