Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு.. பேச்சில் நிதானம் தேவை… குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பேச்சில் நிதானத்தை பின்பற்றுவது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கூடுதலாகவே பணிபுரிவீர்கள். வருமானம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ஒவ்வாத உணவுகளை தயவுசெய்து உண்ண வேண்டாம். பெண்கள் நகை பணம் இரவல் கொடுக்க வேண்டாம். மிக முக்கியமாக பணத்தை யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். இன்று குடும்பத்தில்  இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.

கொடுக்கல் வாங்கலில் சிந்தித்துச் செயல்படுங்கள். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்திற்கு செய்ய முடியாமல் போகலாம். இன்று  ஓரளவு அனைவரையும் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவதற்கு கடினமாக உழைப்பீர்கள். நிறைய போட்டிகளை சமாளிக்க கூடும். எதிர்ப்புகளையும் நீங்கள் சமாளிக்க கூடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்கள் ஆரோக்கியத்தை உங்களுடைய அதிர்ஷ்டத்தையும் அது கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று இல்லத்தில் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் ரொம்ப சிறப்பாக இருக்கும். உங்களுடைய கர்மவினைகள் அனைத்துமே விலகிச்செல்லும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்

Categories

Tech |