Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…மனசோர்வு ஏற்படும்..ஓரளவு நிம்மதி இருக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரம் ஆகியவற்றில் எதிர்பார்த்த லாபம் இல்லாத காரணத்தினால் மனச்சோர்வு கொஞ்சம் ஏற்படும். தேவையில்லாத விஷயத்திற்காக மனக் கவலையும் அதிகரிக்கும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரியத்தை மட்டும் கண்ணும் கருத்துமாக செய்யுங்கள். இன்று குடும்பத்தில் ஓரளவு நிம்மதி குறையும் படியான சூழல் உருவாகும். மாணவர்கள் கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். காரியங்களை சிறப்பாக செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும்.

எதிர்ப்புகள் ஓரளவு விலகும். இன்று தேர்வு எழுதும் எழுதச் செல்லும் மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், எப்பொழுதும் போலவே எழுதிப்பாருங்கள். உங்களுடைய மனதை அமைதியாக வைத்துக் கொண்டாலே காரியங்கள் அனைத்தும் சிறப்பாக முடியும். இரண்டு நிமிடம் தியானம் மேற்கொண்டு பின்னர் பாடங்களை படிப்பது ரொம்ப சிறப்பு. அதேபோல தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் காரமான உணவு வகைகளை தவிர்த்து விட்டு பழங்களை மட்டும் உண்ணுவது ரொம்ப சிறப்பு.

கூடுமானவரை இரவில் தூங்கும்பொழுது பால் அருந்திவிட்டு சென்றால் படித்த பாடம் நினைவில் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |