ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் நாளாகவே இருக்கும். இனிமையான மற்றும் சாதுரியமான பேச்சுக்களால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் திருப்தி ஏற்படும். இன்று வீண் வாக்குவாதத்தில் பகை கொஞ்சம் ஏற்படும். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாகவே இருக்க வேண்டும். வாக்குவாதம் யாரிடமும் செய்யாதீர்கள், பயணத்தில் தடங்கல்கள், வீண் செலவு போன்றவை ஏற்படும். நன்மைகள் ஓரளவு கிடைக்கும். பண வரவு சீராக இருக்கும். வாகன யோகம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் இன்று பெரியோரிடம் ஆலோசனை கேட்டு சில முக்கிய பணிகளை மேற்கொள்ளுங்கள்.
பெரியோர்களின் உதவியும் உங்களுக்கு கிடைக்கும். மனதில் தைரியமும் உண்டாகும். எதிலும் தயக்கமும், பயமும் இன்று ஏற்படாது. உடல்நிலையில் பொருத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுகமாகவே இருக்கும். சரியான நேரத்திற்கு மட்டும் உணவு எடுத்துக் கொள்ளுங்கள், இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பார்கள், உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். படித்த பாடத்தை எப்பொழுதும் போலவே தயவுசெய்து எழுதிப்பாருங்கள். உங்களுடைய மனநிலையை நீங்கள் அமைதியாக வைத்துக்கொள்ள இரண்டு நிமிடம் தியானம் மேற்கொண்டு பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது.
தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் காரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்,பழ வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள், இரவில் தூங்க செல்வதற்கு முன் பால் அருந்தி விட்டுச் செல்லுங்கள். படித்த பாடத்தை நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும், அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்