Categories
தேசிய செய்திகள்

“ரிஷப் பந்த் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்”…புஷ்கர் தாமி உறுதி…!!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ரிஷப் பந்த் தில்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை ஹம்மத்பூர் ஜால் பகுதியில் இந்த சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் ரிஷப் பந்திற்கு முதுகு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்தாமி காயம் அடைந்த ரிஷப் பந்தின் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் தேவை ஏற்பட்டால் ஏர் ஆம்புலன்ஸ் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |