Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு…”ஆதாய பணவரவு”…. வீண் பழி….!!

ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று உங்கள் மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமம் குறையும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். உறவினர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். மற்றவர்களுக்கும் உதவிகளைச் செய்வீர்கள். வீண் பிரச்சினைகளில் மட்டும் தயவுசெய்து தலையிட வேண்டாம். கவனம் இருக்கட்டும் வாகனத்தில் செல்லும் பொழுது மிக பொறுமையாக செல்லுங்கள்.

மனத்துயர் நீங்கும். சிற்றின்ப செலவு இருக்கும். காரணமில்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும் இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களிலும் தெளிவாக நடந்துகொள்ளுங்கள். பணப்பற்றாக்குறை இன்று விலகிச் செல்லும். இருந்தாலும் பழைய பாக்கிகள் வசூல் செய்யும் பொழுது வாக்குவாதங்கள் இல்லாமல் வசூல் செய்யுங்கள். அது தான் புத்திசாலித்தனம். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித பிரச்சினையும் இல்லை.

நல்ல முன்னேற்றமான சூழ்நிலையை அனுபவிப்பார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |