ரிஷப ராசி அன்பர்களே …! இன்று கேட்ட இடத்தில் கடன் உதவி கிடைக்கும். கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் சலுகைகள் கிடைக்கும். வீடு இடம் வாங்கும் முயற்சி நல்லபடியாக கைகூடும். பயணங்கள் செல்ல நேரலாம். பணி நிமிர்த்தமாக அணிய வேண்டியிருக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். சுற்றத்தினர் வருகை இருக்கும்.
அனைத்து விஷயங்களும் இன்று சிறப்பானதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் மன மகிழ்ச்சியும் ஏற்படும். நிதி மேலாண்மையில் மட்டும் எப்போதும் கவனமாக இருங்கள். அது போலவே எதிலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று எந்த விதத்திலும் மேன்மை அடைவீர்கள். புதிதாக காதலில் வயப்படும் சூழலும் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ஓரளவு நல்லபடியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.