ரிஷபம் ராசி அன்பர்களே …! இன்று எல்லாவிதத்திலும் ஏற்றம் தரும் நாளாக இருக்கும். இனிமையான மற்றும் சாதுரியமான பேச்சாற்றலால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். துணிச்சலாக முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிலர் முக்கிய முடிவுகளை இன்று எடுக்கக்கூடும். வீண் அலைச்சல் அவ்வபோது இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்ப்புகள் நீங்கும்.
உடல் நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும். அதுபோல கொஞ்சம் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள இறை வழிபாடு மேற்கொள்வது ரொம்ப நல்லது. பணவரவு ஓரளவு தான் இருக்கும். கௌரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் மற்றவர்கள் மூலம் கிடைக்கக்கூடும். இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். இருந்தாலும் சில முக்கிய முடிவுகளை எடுக்கும்பொழுது குடும்பத்தாரிடம் கலந்து ஆலோசித்து எடுப்பது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமா கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வ செழிப்பை ஏற்படுத்தலாம்.
அதிஷ்ட திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்