Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு … தொழிலில் கவனம் தேவை … நிதானமாக செயல்படுவீர்கள் …!!

ரிஷப ராசி அன்பர்களே …!  இன்றைய நாள் எந்த ஒரு விஷயத்தையும் ஈடுபடும் போது ரொம்ப கவனமாக ஈடுபட வேண்டும்.  இன்று உங்களுக்கு சந்த்ராஷ்டிர தினம் உள்ளதால் பொறுமையாக செயல்பட வேண்டும்.  வாக்குறுதிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  வாகனத்தில் செல்லும் போது நிதானமாக தான் செல்ல வேண்டும்.  இன்று எந்த ஒரு காரியத்தையும் எச்சரிக்கையின் பேரிலேயே செய்வதுதான் நல்லது.  கூடுமானவரை பெரியோரிடம் கொஞ்சம் ஆலோசனை கேட்டு காரியத்தில் ஈடுபடுங்கள்.  எதிர்பாலினரிடம் பழகும் போது ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே  செய்ய தோன்றும்.  தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் இருக்கும்.  பணவரவு தாமதப்பட்டாலும் வந்து சேருங்க.  ஆனால் கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.  பெரிய தொகையை ஏதும் ஈடுபடுத்த வேண்டாம்.  யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.  இந்த விஷயத்திலும் நீங்க ரொம்ப கவனமாக இருங்கள்.  இன்று கணவர் மனைவிக்கு இடையே அவ்வப்போது சில்லறை சண்டைகள் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள்.

பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.  அவரிடம் அன்பை காட்டுங்கள். அதேபோல அக்கம்பக்கத்தாரிடம்  கோபப்படாமல் இருப்பது ரொம்ப நல்லது.  இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் எப்பொழுதுமே உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.  அதுமட்டுமின்றி இன்று இல்லத்தில் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் :  மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்

Categories

Tech |