ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று கூடுதல் லாபம் தொழிலில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும். இடம் பூமி வாங்கக் கூடிய முயற்சி கைகூடும். தொழிலில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு களால் வேலைப்பளுவும் குறையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அதற்கு ஏற்ற நல்ல செய்திகள் வந்துசேரும். தகுதிக்கு ஏற்ற நபர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பும் இன்று அமையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.
வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப பொறுமையாக தான் செல்ல வேண்டும். வாகனச் செலவு கொஞ்சம் இருக்கும். இன்று பராமரிப்பு செலவு அதிகமாகவே இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். செலவை கட்டுப்படுத்துவதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும். தேவையற்ற வாக்கு வாதத்தை மட்டும் தவிர்ப்பது ரொம்ப நல்லது. யாரிடமும் எப்பொழுதுமே வாக்குவாதங்கள் செய்யாமல் இருங்கள் அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். காதலர்களுக்கு இன்று இனிய நாளாக அமையும். காதல் கைகூடும், திருமண பேச்சுவார்த்தை நடத்தினால் சிறப்பாகவே முடியும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று இல்லத்தில் விஷ்ணுபகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு அன்னம் இடுவது பழக்கமாக்கிக் கொள்ளுங்கள், காக்கைக்கு நீங்கள் எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள், உங்களுடைய வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்