Categories
உலகசெய்திகள்

“ரிஷி சுனக் பெயரை ஜோபைடன் கொலை செய்வதை பாருங்கள்”… இணையத்தில் வைரலாகும் வீடியோ.. நெட்டிசன்கள் கிண்டல்…!!!!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்ட செய்தி கிடைத்தவுடன் அதை மேடையிலேயே ஜோபைடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் 79 வயதான ஜோ பைடன் ரிஷி சுனக் பெயரை தவறாக உச்சரித்துள்ளார். அதாவது ரிஷி என்பதை ரிஷித் எனவும் சுனக் என்பதை சினூக் ஹெலிகாப்டரை நினைவுபடுத்தும் விதமாக சனூக் எனவும் மாற்றி உச்சரித்துள்ளார்.

ரஷீத் சனூக் தற்போது பிரதமர் என செய்தி கிடைத்திருக்கிறது என்று ஜோபைடன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி ஜோபைடன் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். அதனை தொடர்ந்து அவரை கேலி செய்து மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளது. ரிஷி சுனக் பெயரை ஜோ பைடன் செய்வதை பாருங்கள் என தி ஸ்பெக்டேட்டர் இன்னும் பத்திரிக்கை கிண்டல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் ரஷீத் சனூக் பிரதமரானது அபரிமிதமான சாதனை என ஜோபைடன் தெரிவித்துள்ளார். மேலும் அவரது பெயரை கற்றுக் கொள்வது பற்றி கவலைப்படாதது தான் மிகப்பெரிய சாதனை என கேலி செய்திருக்கின்றார். ரஷீத் சனூக் என்ற பெயருடன் ரிஷி சுனக் பாரம்பரிய அரபு உடையில் இருப்பது போல் சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தையும் சிலர் வெளியிட்டு இருக்கின்றனர்.

Categories

Tech |