Categories
தேசிய செய்திகள்

ரிஸ்க் இல்லாமல் ரூ. 4 லட்சம் வரை லாபம்… இப்படி ஒரு சிறந்த திட்டமா…? அது என்ன வாங்க பார்க்கலாம்…!!!!!

ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு தபால் அலுவலக முதலீடு திட்டங்கள் ஒரு சிறந்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதனால் தபால் அலுவலக திட்டங்கள் கிராமப்புற மக்கள்,மிடில் க்ளாஸ் மக்களிடையே மிகுந்த  வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் தபால் அலுவலக தொடர் வைப்பு திட்டம் பாதுகாப்பான முதலீடாக மட்டுமல்லாமல் நல்ல வருமானம் தரக்கூடியதாகவும் இருக்கிறது.

இத்திட்டத்தில் தொடர்ந்து சிறு தொகையை முதலீடு செய்து வந்தால் நல்ல லாபம் கிடைக்கும். அந்த வகையில் தபால் அலுவலக தொடர் வாய்ப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதலீடு செய்துகொள்ளலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு வயது வரம்பு இல்லை. தற்போது தொடர் வைப்பு திட்டத்திற்கு5.8% பட்டி வழங்கப்பட்டு வருகிறது. வாய்ப்பு திட்டத்தில் மாதம் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக்கொண்டால், தற்போது வழங்கப்படும் 5.8% வட்டியை வைத்துக் கணக்கிட்டால் உங்கள் பணம் 16 லட்சம் ரூபாயாக மாறிவிடும் ஏனெனில் வட்டி தொகை ஒவ்வொரு காலத்திற்கும் கணக்கிடப்பட்டு செலுத்தப்படுகிறது.

மாதம் ரூபாய் 10,000 என பத்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களின் ஒட்டுமொத்த முதலீட்டை 12 லட்சம் ரூபாய் ஆனால், பத்து ஆண்டு இறுதியில் 16 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும் ரிஸ்க் எடுக்காமல் 4 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து கொள்ளலாம்.

Categories

Tech |