மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தின் ஓய்வுபெற்ற ஊழியர் ஆவார். இவர் குமாரகோவில் பகுதியில் இருக்கும் செல்போன் கடைக்கு ரீச்சார்ஜ் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் திரும்பி வரும் வழியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று முருகேசனின் மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் முருகேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் முருகேசனை மீட்டு சிகிச்சைக்காக ஆசிரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தக்கலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.