வருமான வரித்துறை 1.97 கோடி பேருக்கு 1,71,555 கோடி ரூபாய்க்கு மேல் வருமான வரி ரீபண்ட் தொகை செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமானவரி ரீபண்ட் குறித்து தகவல்களை வருமான வரித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை சுமார் 2 கோடி பேருக்கு1.71 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வருமான வரி ரீபண்ட் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் ஏப்ரல் 2021 முதல் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வரை1.97 கோடி பேருக்கு1,71,555 கோடி ரூபாய்க்கு மேல் வருமான வரி ரீபண்ட் தொகை செலுத்தப்பட்டது.
இதில்1,95,17,945 பேருக்கு 63,234 கோடி ரூபாய் தனிநபர் வருமான வரியும், 2,28,604 நிறுவனங்களுக்கு1,08,322 கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி ரீபண்ட் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மேலும்2021-22 மதிப்பு ஆண்டுகளாக1.58 கோடி ரூபாய் வருமான ரீபண்ட் தொகையும் செலுத்த பட்டுள்ளதாக வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது