தனக்கு ரீமேக் திரைப்படத்தில் நடிப்பது பிடிக்காது என விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய்தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் லைகர் ஆகும். இப்படத்தில் விஜய்தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்து இருக்கிறார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார். அத்துடன் இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அண்மையில் வெளியாகிய இந்த படத்தின் பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
லைகர் படத்தில் விஜய் தேவரகொண்டா மிக்ஸ்ட் ஆர்டிஸ்ட்டாக நடித்துள்ளார். இந்த நிலையில் லைகரை ரவிதேஜாவின் அம்மா நன்னா ஓ தமிழா அம்மாயி படத்துடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். இது பற்றி பேட்டி ஒன்றில் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளதாவது, ரவிதேஜா படமும் இத்திரைப்படமும் வித்தியாசமானது. இரண்டுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. எனக்கு ரீமேக்குகள் பிடிக்காது. அம்மா நான்னா ஓ தமிழ் அம்மாயி திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் லைகர் வித்தியாசமான திரைப்படம். இத்திரைப்படத்தில் அம்மா மகன் இடையேயான பாசம் தான் ஹய் லைட்டே. பல விஷயங்கள் இத்திரைப்படத்தில் இருக்கின்றது. நான் ரீமேக்குகளில் ஒருபோதும் நடிக்க மாட்டேன். எனக்கு ரீமேக்குகள் பிடிக்காது எனக் கூறியுள்ளார்.