Categories
மாநில செய்திகள்

ரீல்ஸ் மோகம்…. நம்பி சென்ற 2 மாணவிகள்…. அந்தோ பரிதாபம் ….!!

சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் அடிக்கடி தங்களது வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த இரு மாணவிகளும் கடந்த வியாழக்கிழமை அன்று காணவில்லை. இதையடுத்து பெற்றோர்கள் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் மாணவிகளின் செல்போன் டவர் மூலம் வடசென்னை பகுதியில் உள்ள கெஸ்ட் ஹவுசில் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து உடனே போலீசார் விரைந்து 2 மாணவிகளையும் மீட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேரை கைது விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், திருவொற்றியூரை சேர்ந்த சுரேன் என்கிற அப்பு என்பவர் இந்த இரு சிறுமிகளுடன் சமூக ஊடகம் மூலம் பழகி வந்துள்ளார். அதன் பிறகு அவர்களை கடற்கரைக்கு வரவழைத்து மாணவிகளுடன் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். அதில் ஒரு மாணவியின் மொபைல் போனை திருடிய அப்பு, அவர்கள் செல்போனை விட்டு சென்றதாக கூறி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்துள்ளார். இதையடுத்து செல்போனை வாங்குவதற்காக அந்த மாணவிகள் ரயில் நிலையத்திற்கு திரும்பினர். அப்போது அப்பு டின்னர் சாப்பிட போகலாம் என்று கூறியபோது மாணவிகளும் அதற்கு ஒப்புக் கொண்டனர். ஹோட்டலில் தனது நான்கு நண்பர்களை அறிமுகம் செய்துள்ளார்.

அதன்பிறகு சாப்பிட்டு முடித்ததும் இரவு நேரமானதால் தங்களுடன் ஹோட்டலில் தங்கி விட்டு காலையில் செல்லுங்கள் என்று கேட்டதற்கு அந்த மாணவிகள் இசைவு கொடுத்துள்ளனர். அதன்படி இவர்கள் 7 பேரும் வடசென்னை பகுதியில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்த நிலையில் அந்த இரு மாணவிகளையும்  பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து அந்த 5 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தாம்பரம் மாஜிஸ்ட்ரேட் அனுபிரியா முன் ஆஜர்படுத்தினர். குற்றம் சாட்டப்பட்ட 4 பேரை வருகின்ற ஜனவரி 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்றும் சிறுவனை சீர்திருத்த மையத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

Categories

Tech |