சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ஜடேஜா வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் பக்கம் திரும்பியுள்ளனர். 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறுகிறது. எனவே இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக நேற்றுக்குள் (நவம்பர் 15ஆம் தேதி) ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்கள், பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் அறிவுறுத்தியிருந்தது. எனவே நேற்று மாலையுடன் காலக்கெடு முடிந்த நிலையில், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலை சமர்ப்பித்துள்ளது. அதில் ரவீந்திர ஜடேஜாவை தக்க வைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஏனென்றால் கடந்த சீசனில் ஜடேஜாவின் தலைமையில் சென்னை அணி தொடர் தோல்வியை சந்திக்க, அவர் பாதியில் விலகினார். மேலும் காயத்தால் பாதி போட்டிகளில் ஜடேஜா ஆடவில்லை. இதையடுத்து தோனி கேப்டனாக செயல்பட்டார். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே தொடர்பான புகைப்படங்களையும் நீக்கினார் ஜடேஜா. இதனால் சிஎஸ்கேவுக்கும், ஜடஜாவுக்கும் இடையே பிரச்சனை இருப்பதாகவும், இதனால் வரும் 2023 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அவர் ஆடுவாரா? இல்லை வேறு அணிக்கு ஆடுவாரா என சமூக வலைதளங்களில் குழப்பமான கருத்துக்கள் பரவியது.
இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜடஜாவைஅணி நிர்வாகம் தக்கவைத்துள்ளது. அதேபோல சென்னையின் கேப்டனாக எம் எஸ் தோனி தொடர்கிறார். அதேசமயம் சென்னை அணிக்காக நீண்ட ஆண்டுகளாக விளையாடி வந்த பிராவோவை விடுவித்துள்ளது சிஎஸ்கே.
இந்நிலையில் சென்னை அணியில் தக்கவைக்கப்பட்டிருக்கும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். தோனியை வணங்குவது போன்று இருக்கும் அந்த புகைப்படத்தை பகிர்ந்த ஜடேஜா, “எல்லாம் நன்றாக இருக்கிறது, மீண்டும் தொடங்கலாம்” என பதிவிட்டுள்ளார். ஜடேஜாவின் இந்த மகிழ்ச்சியான பதிவு சென்னை ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதேபோல தோனியுடன் மனக்கசப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று பதிலடி கொடுக்கும் விதமாக ஜடஜாவின் இந்த புகைப்படம் அமைந்துள்ளது. இந்த ட்விட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் :
விடுவிக்கப்பட்ட சிஎஸ்கே வீரர்கள் : டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கேஎம் ஆசிப், நாராயண் ஜெகதீசன்.
தற்போதைய அணி : எம்எஸ் தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர், பிரசாந்த் சோலங்கி, மஹீஷ் தீக்ஷனா
மீதமுள்ள தொகை : 20.45 ரூபாய்
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 2
Everything is fine💛 #RESTART pic.twitter.com/KRrAHQJbaz
— Ravindrasinh jadeja (@imjadeja) November 15, 2022
https://twitter.com/Movies4u_Officl/status/1592520723146641408