சாப்பிட தோசையே சாப்பிட்டு போர் அடிக்கா, அப்போ இதை ட்ரை பண்ணுங்க அவ்ளோ சுவையாக இருக்கும்:
பலாப்பழ அடை செய்ய தேவையான பொருட்கள்:
பலாச்சுளை – 14
அரிசி மாவு – 2 டம்ளர்
சோள மாவு – 1 டம்ளர்
வெல்லம் – 1 டம்ளர்
ஏலப்பொடி – 1 கரண்டி
தேங்காய்ப்பூ – 1 கரண்டி
நெய் – 3 கரண்டி
செய்முறை:
முதலில் பலாச்சுளையை நெய்யில் வதக்கி, அரைத்து, அரிசி மற்றும் சோள மாவில் சேர்த்து கொள்ளவும். அதனுடன் உப்பு, தேங்காய்ப்பூ, வெல்லம், ஏலப்பொடி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
அதன்பின் தோசைக்கல்லில் அடையை தட்டவும். இதனை அடுத்து மேலும் வேக வைக்க, சுற்றிலும் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சுடலாம். டேஸ்டான பலா அடை தயார்.