Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ருசியான வெந்தய குழம்பு..!!

வெந்தய குழம்பு எளிமையான முறையில் வீட்டில் செய்து உண்டு மகிழுங்கள் .உடலுக்கு மிகவும் சிறப்பான குழம்பு வகைகளில் இதுவும் ஒன்றாகும்.

தேவையான பொருட்கள்:
வெந்தயம்             – 1,1/2 டீஸ்பூன்
நல்ல எண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு, உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்          – 150 கிராம்
பூண்டு                                     – 10 பற்கள்
தக்காளி (சின்னது)           – 1
கறிவேப்பிலை                    – சிறிதளவு
வத்தல் பொடி                      – 1 டீஸ்பூன்
மல்லிப்பொடி                      – 1டீஸ்பூன்
குழம்பு மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் போடி                      – 1/2 டீஸ்பூன்
சீரக பொடி                            – கால் டீஸ்பூன்
உப்பு                                         – தேவையான அளவு
புளி                                           – 1 எலுமிச்சை அளவு

செய்முறை:
வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம் சேர்த்து பொறிந்ததும் கடுகு சேர்த்து தாளித்து, உரித்த வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.வதங்கும்பொழுது சிறிதளவு கறிவேப்பிலை போட வேண்டும்.பின்னர் பூண்டு போட்டு பொன்னிறமாக வதக்குங்கள்.

அதனுடன் வத்தல் பொடி, குழம்பு மிளகாய் தூள், சீரக தூள்,மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறி, புளி கரைசல் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடுங்கள், 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள்.. மனமான வெந்தய குழம்பு ரெடி..!

Categories

Tech |