சாம்பார் போன்ற குழம்பு வச்சி சாப்பிடும்பொழுது கூட்டாக பூசணி கடலைப்பருப்பு கூட்டு வைத்து சாப்பிடுங்கள் அருமையாக இருக்கும்..!
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு – 200 கிராம்
பூசணிக்காய் – 1 (சின்னது)
சின்ன வெங்காயம் – 10
வத்தல் – 8
சீரகம் – 1 டீஸ்பூன்
தேங்காய் – 1 துண்டு
தாளிக்க தேவையானவை:
கடுகு, உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 1
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
கடலை பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவேண்டும். பூசணிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். இரண்டையும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். தண்ணீர் கம்மியாகத்தான் ஊற்ற வேண்டும், என்என்றால் பூசணி வேக, வேக தண்ணீர் ஊறும்.
இவை அவியும் நேரத்தில் நாம் வத்தல், சீரகம், தேங்காய், வத்தல், உல்லி ஆகியவைகளை மசாலாவாக இடித்து கொள்ள வேண்டும். பின்னர் பூசணியும், கடலைப்பருப்பும் வெந்ததும் அதில் மசாலா போட்டு, தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடி அரை டீஸ்பூன் போட்டு கிளற வேண்டும்.
பிறகு தாளித்து ஊற்ற வேண்டும். தேங்காய் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு உளுந்தம்பருப்பு போட்டு பொறிந்ததும் சின்ன வெங்காயம் 1 பொடியாக நறுக்கி போடுங்கள், அது பொன்னிறமாக வெந்ததும், கறிவேப்பிலை போட்டு, பூசணியில் போட்டு கிளறி இறக்கி விடுங்கள்..