Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ருசி மிகுந்த…தக்காளி பிரைடு ரைஸ் ரெசிபி…!!

தக்காளி பிரைடு ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி                      – 1 கப்
பெரிய வெங்காயம்           – 1
முந்திரிப்பருப்பு                    –  1
பட்டை கிராம்பு தூள்          – அரை டீஸ்பூன்
தக்காளி பெரிய சைஸ்     – 2
புதினா (ஆய்ந்தது)               – 1 கப்
இஞ்சிப்பூண்டு விழுது        – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்                    – 2
தேங்காய்ப்பால்                     – 1 கப்                                                                                                                                  தண்ணீர்                                    – தேவையான அளவு
நெய், எண்ணெய்                   – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

மிக்ஸி ஜாரை எடுத்து அதில் தக்காளி, புதினா, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை  போட்டு நைஸாக அரைத்து எடுக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய், எண்ணெய், அரைத்து வைத்திருக்கும் கலவை, பட்டை கிராம்புத்தூள் போட்டு தாளித்து, இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் அதனுடன் அரைத்த தக்காளி விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

குக்கரை அடுப்பில் வைத்து அதில் பாசுமதி அரிசியை போட்டு, வதக்கிய கலவையையும் சேர்த்து, தேங்காய் பால், தண்ணீர் தலா ஒரு கப், உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைத்து இறக்கினால் சூடான மற்றும் சுவையான தக்காளி பிரைடு ரைஸ்  தயார் .

Categories

Tech |