மராட்டிய மாநிலத்தில் வந்தேரி கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக ரமேஷ் லத்கே என்பவர் இருந்து வந்தார். இந்த நிலையில் இவரது மறைவை அடுத்து அந்த தொகுதி காலியாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது இந்த தேர்தலில் சிவசேனா சார்பில் வேட்பாளராக ருதுஜா லத்கே நிறுத்தப்பட்டு இருக்கின்றார். இந்த சூழலில் லக்கேவுக்கு எதிராக பாஜக சார்பில் வேட்பாளர் யாரையும் இடைத்தேர்தலில் களமிறங்க வேண்டாம் எனக் கோரி மராட்டிய நிவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே மராட்டிய துணை முதல் மந்திரி தேவேந்திர பத்னாவிசுக்கு கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்து இருக்கின்றார்.
இதனை அடுத்து சமூக ஊடகத்தில் வெளியான அந்த கடிதத்தில் ரமேஷ் லத்கே மறைவினால் அந்தத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது அதனால் இடைத்தேர்தல் நடத்துவது தற்போது அவசியம் ஆகியுள்ளது. மனைவி ருத்ஜா வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றார். மறைந்த எம்எல்ஏ ரமேஷ் லத்கேவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த தேர்தலில் மராட்டிய நிவ நிர்மாணம் சேனா சார்பில் யாரும் போட்டியிடவில்லை என கூறியுள்ளார். மேலும் அரசியல் களத்தில் அவரது பயணம் மற்றும் வளர்ச்சியை நான் கண்டிக்கின்றேன். அதனால் ருது லத்கேவுக்கு எதிராக பாஜக வேட்பாளர் யாரையும் களமிறக்க வேண்டாம் என அந்த கடிதத்தில் ராஜ்த்தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.