விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவி நாதபுரம் பகுதியில் அமைந்துள்ள ராமர் கோவிலில் கோவிலுக்கு உற்சவ சிலையாக உருவாக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தற்பொழுது கன்னியாகுமரியில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அதனை மூட உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ‘ருத்ர தாண்டவம்’ படம் திரைக்கு வரும் சூழ்நிலையில் இவ்வாறு செய்துள்ளார். மேலும் இப்படத்தை நீண்ட காலம் தெரியாமல் மறைத்து வைக்க இயலாது. இத்திரைப்படம் வெளி வந்த பிறகு கிறிஸ்தவர்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஒருவர் இந்துவாக இருக்க வேண்டும் இல்லையேல் கிறிஸ்தவராக இருக்க வேண்டும். ஆனால் இரண்டையும் திணித்து அரசாங்கத்தை ஏமாற்ற கூடாது.
இது சட்டப்படி குற்றமாகும். மேலும் இது அம்பேத்கர் கொள்கைகளுக்கும் எதிரானது. கிரிப்ட்டோ கிறிஸ்தவர்கள் ஜா சங்கத்தை தடை செய்ய வேண்டும். மேலும் இவர்கள் அரசு பணியில் பணிபுரிகின்றார்களா? என்பதை கண்டறிந்து அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதைபோல் பட்டியலின மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை தொடர்ந்து அவர்களுக்கு சலுகைகள் அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.