‘ருத்ரன்’ படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா, காஞ்சனா-2, காஞ்சனா-3 போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இதில் காஞ்சனா திரைப்படம் பாலிவுட்டில் அக்ஷய்குமார் நடிப்பில் லக்ஷ்மி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் துர்கா, ருத்ரன், அதிகாரம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
#Rudhran #ருத்ரன் Update on 26.08.2021 11am IST 💥
Stay Tuned!@offl_Lawrence @gvprakash @priya_Bshankar @RDRajasekar #PoornimaBhagyaraj @kaaliactor @editoranthony @teamaimpr— S Kathiresan (@kathiresan_offl) August 25, 2021
இதில் ருத்ரன் படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் நாளை ருத்ரன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அல்லது டீசர் குறித்த அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.