Categories
சினிமா தமிழ் சினிமா

‘ருத்ர தாண்டவம்’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் எப்போது?… வெளியான அறிவிப்பு…!!!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ர தாண்டவம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார்.

ருத்ர தாண்டவம் படத்தின் போஸ்டர்

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ருத்ர தாண்டவம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி இந்த படத்தில் இடம்பெற்ற ‘அம்மாடி’ என்ற பாடல் வெளியாக உள்ளது. ஜுபின் இசையமைத்துள்ள இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |