இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ர தாண்டவம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம் திரைப்படம் உருவாகியுள்ளது. ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் கருணாஸ், ராதாரவி, இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .
திரெளபதி தாய் மற்றும் ஈசன் துணையுடன் உலகம் முழுவதும் அக்டோபர் 01 முதல் திரையரங்குகளில்
ஆட்டம் ஆரம்பம்.. #ருத்ரதாண்டவம் #RudraThandavam#RudraThandavamTrailer 👇👇👇https://t.co/MqjPwFzNxj pic.twitter.com/KvKb4QOKv2— Mohan G Kshatriyan (@mohandreamer) September 16, 2021
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ருத்ர தாண்டவம் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை இயக்குனர் மோகன் ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அதில் ‘திரௌபதி தாய் மற்றும் ஈசன் துணையுடன் உலகம் முழுவதும் அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில் ஆட்டம் ஆரம்பம்..’ என பதிவிட்டுள்ளார்.