சென்னையில் கொரோனா பரவல் காரணமாக கடத்த 2 ஆண்டுகளாக பொதுப் போக்குவரத்தை தவிர்த்து விட்டு தனிநபர் வாகனங்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக இருசக்கர வாகன விற்பனையும், பயன்பாடும் பெரிதும் அதிகரித்தது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் எரிபொருள் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு காட்டிலும் தற்போது ரூ.30 அதிக விலைக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது. இதனால் தங்கள் இருசக்கர வாகனங்களை பார்க்கிங்ல் போட்டு மீண்டும் பொது போக்குவரத்தை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, MTC பேருந்துகளில் தினசரி 29 லட்சம் பேர் பயணிக்கின்றன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது. அதனை போல புறநகர் ரயில்களில் 30%, மெட்ரோ ரயிலில் 50% பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் சென்னை மாநகரின் தேவையான போக்குவரத்து கழக பூர்த்தி செய்கிறதா என்றால்? இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மத்திய நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ரூ.1 லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 60 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். அப்படி பார்த்தால் சென்னைக்கு 5,400 பேருந்துகள் தேவைப்படுகின்றனர். ஆனால் தற்போது 3400 பேருந்துகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. எனவே கூடுதலாக 2000 பேருந்துகள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ரூ.4,337 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கு பெண்களுக்கு இலவச பயணத்திட்டமும் ஒரு காரணமாகும். இந்த திட்ட அமல்படுத்தப்பட்டதிலிருந்து மாநகரப் பேருந்தில் பயணிக்க பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனால் இது அரசின் கொள்கை முடிவு என்றால் நஷ்டத்தை சமாளிக்க்கும் வகையில் அரசு மாற்று நடவடிக்கை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.