-தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பிரதமர் நரேந்திர மோடி தமிழக வரும்போதெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கருப்பு சட்டை அணிந்து கொண்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார். திமுக கூட்டணி எதிர்க்கட்சிகளான கம்யூனிஸ்ட்,வீசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கருப்பு பலூன்களை பறக்க விட்டனர். இந்த நிகழ்வுகளை யாராலும் மறக்கவே முடியாது. ஆனால் தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றதிலிருந்து மத்திய பாஜக அரசுடன் இணக்கமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. அதாவது நேற்று தொடங்கிய சர்வதேச ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாஜக கொடுத்த சிறப்பான வரையறுப்பை விட, தமிழக அரசு சிறப்பான வரவருப்பை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டுமில்லாமல் மேடையில் பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலினும் கைகளை குலுக்கி கொண்டு தோளில் தட்டி கொடுத்த வண்ணம் இருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசுடன் திமுக திடீர் இணக்கம் காட்டுவதற்கு வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் அதிமுகவை கழற்றிவிட்டு திமுகவுடன் பாஜக கூட்டணி வைப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பலவீனம் ஆகிவிட்டது என்று தான் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது கட்சியை கைப்பற்ற ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. இனியும் அதிமுகவை நம்பினால் வேலைக்கு ஆகாது என்று பாஜக மேலிடம் முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் திமுக பக்கம் தங்கள் கவனத்தை பாஜக திருப்பி உள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கான வேலையில் திமுக முக்கிய பள்ளி ஒருவர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு குறித்து கருத்து தெரிவித்த திமுக மூத்த நிர்வாகி ஒருவர், தமிழகத்திற்கு நல்லது செய்து வருவதால் பிரதமருக்கு வரவேற்பு அளித்தோம் என்று அவர் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு அப்போது திமுக எதிர்ப்பு தெரிவித்தது ஏன்? என்றும் தமிழகத்திற்கு நல திட்டங்களை தொடங்கி வைக்க தானே வந்தார். திமுக இரட்டை வெளிவந்தது விட்டது என்று பலர் கூறுகின்றனர்.