தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ஆம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் எது சிறந்த ரூட் என்ற போட்டி எழுந்தது. இதனால் மாணவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து பச்சையப்பன் சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர். இந்த ஊர்வலத்தில் 200 பேர் கலந்து கொண்டனர். இந்த 200 பேர் மீதும் கொரோனா விதிமுறைகளை மீறியதாகக் கூறி மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. யாரிடமும் அனுமதி வாங்காமல் ஊர்வலமாக சென்றுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை கல்லூரி மாணவர்கள் மோதலை தடுக்க காவல்துறை அதிகாரிகள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. ரூட் தல எனக் கூறி கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடக்கூடாது. பஸ் டே, மோதல் போன்ற செயலில் ஈடுபட்டு வழக்கில் சிக்கினால் எதிர்காலத்தில் பிரச்சனை வரும். எனவே மாணவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.