இந்தியாவில் கள்ள நோட்டு புழக்கத்தை தடுப்பதற்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அரசு ரத்து செய்து தற்போது புதிய 500 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. இதனை 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில் சமீபகாலமாக நட்சத்திர வரிசை ரூபாய் நோட்டுகள் அதிக அளவு புழக்கத்தில் உள்ளன. இது கள்ள நோட்டா அல்லது நல்ல நோட்டா என்ற குழப்பம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சிராப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சங்க நிறுவன தலைவரும் சமூக ஆர்வலருமான விஜயகுமார் மற்றும் வானவியல் மற்றும் பணத்தாள்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், இந்திய ரிசர்வ் வங்கி பணத்தாள்களில் பிழை மற்றும் குறைபாடு இருப்பின் வரிசை எண்ணில் நட்சத்திர வரிசையுடன் கூடிய பணத்தாள் வெளியிடப்படும்.
இது வழக்கமான பணத்தாள் தான். ஆனால் எண் வரிசையில் இடம் பெற்றிருக்கும் நட்சத்திர குறியீடு பொதுமக்களுக்கு இது கள்ள நோட்டா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும். ஒரு 500 ரூபாய் நோட்டில் பிழை இருப்பின் அந்த ரூபாய் நோட்டின் எண் பேனலில் கூடுதல் எழுத்து இடம்பெறும். அதாவது பணத்தாள் தொடரில் உள்ள அதே எண்ணுக்கு முன்பு ஒரு நட்சத்திர குறியீடு இருக்கும். இது இந்திய ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்படுவதால் இது சட்டபூர்வமாக பயன்படுத்தக்கூடியது.அதனால் பொதுமக்கள் எந்த அச்சமும் இல்லாமல் இதனை பயன்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.