டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆன அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் இருப்பதாவது, இந்தியாவில் புதியதாக வெளியிடப்படும் கரன்சி (ரூபாய்) நோட்டுகளில் கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் போன்றோரது உருவங்களை இடம்பெற செய்யவேண்டும் என மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கேட்டுகொள்கிறேன் என வலியுறுத்தி இருக்கிறார். நாம் முயற்சிகளை மேற்கொண்டாலும், கடவுள்களின் ஆசி இல்லையெனில் சில சமயங்களில் அந்த முயற்சிக்கு பலன் இருக்காது. இதன் காரணமாக புதியதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தி உருவமும், மற்றொருபுறம் பெண் கடவுள் லட்சுமி மற்றும் கடவுள் விநாயகர் படங்கள் இடம்பெறவேண்டும்.
இருதெய்வங்களின் உருவங்கள் ரூபாய் நோட்டுகளில் இருப்பது, நாட்டை வளம்பெற செய்ய உதவும் என்று ஆலோசனை கூறியுள்ளார். அதனால் நாட்டின் பொருளாதார சூழ்நிலையானது மேம்படும். மேலும் ஒட்டு மொத்த நாடும் ஆசிகளை பெறும். இது தொடர்பாக நாளை (அ) நாளை மறுநாள் நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவேன் என்று அவர் கூறியுள்ளார். சென்ற சில நாட்களுக்கு முன்பு இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதில் நேதாஜி படம் இடம்பெற வேண்டும் என அகில பாரத இந்து மகாசபை வலியுறுத்தியிருந்தது. இதுகுறித்து அகில பாரத இந்து மகாசபையின் மாநில செயல் தலைவர் சந்திரசூர் கோஸ்வாமி, கொல்கத்தா நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, இந்திய விடுதலை போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பங்கு எந்த அடிப்படையிலும் மகாத்மா காந்திக்கு குறைந்ததில்லை.
இதனால் இந்தியாவின் தலைசிறந்த சுதந்திர பேராட்டவீரர் நேதாஜிக்கு கவுரவம் அளிக்கும் சிறந்தவழி, அவரது புகைப்படம் கரன்சி நோட்டுகளில் இடம்பெற செய்யவேண்டும். காந்திஜியின் புகைப்படத்துக்கு பதில் நேதாஜியின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என அவர் கூறினார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த நிலையில் ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமி மற்றும் விநாயகர் படங்கள் இடம்பெறவேண்டும் என்று முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.